வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பத்துதல படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.இதனை தொடர்ந்து மாநாடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் STR.இதனை தொடர்ந்து பத்து தல,கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முடிந்தது.இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.தற்போது சிம்புவின் தங்கை மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் வீடியோ ஒன்றை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.செம கியூட்டான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)