விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் தொடங்கி பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு TRP-யில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.

இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலங்களாக மாறிவிட்டனர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் இருந்து அகிலன் சில நாட்களுக்கு முன் விலகினார்.

இவருக்கு பதிலாக திருமதி ஹிட்லர் தொடரில் பிரபலமான சுகேஷ் நடிக்கிறார் இதுகுறித்த புகைப்படத்தை விஜய் டிவி சில தினங்களுக்கு முன் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.இவரது எபிசோடுகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன,இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

sugesh replaces akilan in bharathi kannamma vijay tv roshini arun