முதல்முறையாக முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இல்லாத  அ.இ.அ.தி.மு.க -வும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இல்லாத தி.மு.க -வும் போட்டியிடும் முதல் தேர்தல் களமாக அமைந்தது. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தங்களது வெற்றிக்காக பிரச்சாரத்தில் மிக மும்முரமாக செயல்பட்டு வந்த வேளையில் தி.மு.க-வின் முக்கியமான பிரச்சாரமாக அமைந்த பாடல் ஸ்டாலின் தான் வாராரு என்ற பிரச்சார பாடல்

இந்தப் பாடலை இளம் இசையமைப்பாளர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்திருந்தார். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலை பிரபல பாடகர்களான அந்தோணி தாஸ் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் பாடினர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவிய இப்பாடல் தி.மு.க-வின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ்-பிரேஷி ஷந்தனா திருமணம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்றது. 

ராமாபுரத்தில் இருக்கும் கிறிஸ்து ஜோதி ஆலயத்தில் திருமணம் நடைபெற்ற பின்னர் மாலையில் பார்க் ஹயாத் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

பிறகு திருமண நிகழ்வு குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மணமக்களை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் அந்த பதிவில், ’ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு’ என்ற கழகத்தின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி ஜெரார்ட் ஃபெலிக்ஸ் - பிரேஷிசாந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்று மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினோம். மணமக்கள்  தமிழ் போல் வாழ்க. என தெரிவித்துள்ளார். 

 ’ஸ்டாலின் தான் வாராரு..விடியல் தரப் போறாரு’ பாடலின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்த இளம் இசை அமைப்பாளர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் விரைவில் திரையுலகில் இசை அமைப்பாளராக களம் இறங்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.