தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன் செம பருமனாக இருந்த STR இந்த படத்திற்கு செம ட்ரான்ஸ்பரமேஷன் எடுத்திருந்தார் சிம்பு.இவரது லுக் படத்தில் பழைய சிம்புவை பார்ப்பது போல உள்ளது என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

ஈஸ்வரன் படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது.இதனை தொடர்ந்து மாநாடு படம் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் உள்ளது.இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.ட்ரான்ஸபோர்மேஷனுக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கத்தொடங்கினார் சிம்பு.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பதிவிட்டு வருவார்.சமீபத்தில் புதிய லுக்கில் சமையல் செய்வது போல ஒரு வீடீயோவை பகிர்ந்தார் சிம்பு.இந்த வீடீயோவை ஒரு வாரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.ஒரு வாரத்தில் இந்த சாதனையை இன்ஸ்டாகிராமில் செய்யும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை சிலம்பரசன் பெற்றுள்ளார்.