தனுஷ்,சாய் பல்லவி நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே வைரல் ஹிட் ஆனது.பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் யூடூப்பில் வேற லெவல் ரீச்சை பெற்றது.தனுஷின் catchy-ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்தது.

ஆடியோ ரிலீஸின் போதே tiktok-ல் பலரால் பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சாதனையையும் படைத்தது.அடுத்ததாக youtube-ல் வீடியோ வந்தவுடன் பல சாதனைகளை படைத்தது.பிரபுதேவாவின் அசத்தலான steps-க்கு தனுஷ்,சாய் பல்லவி இருவரும் அசத்தலாக நடனமாட views எகிறியது.

தமிழில் அதிவேகமாக 100 மில்லியன் ,150 மில்லியன் என சாதனைகளை அடுக்கிய இந்த பாடல் தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.தென்னிந்தியாவின் 200,300 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

தொடர்ந்து 500 மில்லியன் முதல் 900 மில்லியன் வரை அனைத்து சாதனைகளையும் முறியடித்து அசத்தியது இந்த பாடல்.இந்த பாடல் 100 கோடி பார்வையாளர்களை கடந்து தற்போது தமிழின் முதல் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்ற தென்னிந்திய வீடியோ பாடல் என்ற பெருமையை பெற்று அசத்தியுள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.