தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.விஜய் இரட்டை வேடங்களில் வயதான கெட்டப் உடன் இந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்து வந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச்சை பெற்றிருந்தன. ஆல்பம் வெளியான அனைத்து தளங்களிலும் சூப்பர்ஹிட் முடித்திருந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான். 

இவர் ஜகோபிண்டே ஸ்வர்கராஜ்யம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து FIR, மழையில் நனைகிறேன் போன்ற படங்கள் உள்ளது. 

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்கில் செலவு செய்து வருகின்றனர், இந்நிலையில், தற்போது ஆடை அலங்காரம் எல்லாம் செய்து கொண்டு, இளவரசி போல இருக்கும் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரெபா மோனிகா ஜான், நான் பாகுபலி 3ம் பாகத்தில் தேவசேனாவாக நடிக்கட்டுமா? என சும்மா பதிவு செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் தாராளமாக நீங்க நடிக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.