திரையுலகில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். தற்போது நவீன் இயக்கத்தில் உருவான அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். 

Arun Vijay Cycling And Cardio Exercise During Lockdown

ஊரடங்கால் ஜிம்முக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 40 கிலோமீட்டர் சைக்கிள் ரைட் செய்ததாக புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். சாலையில் செல்லாமல் வீட்டின் அருகே இந்த ஒர்க்அவுட்டை செய்துள்ளார். லாக்டவுனிலும் தீவிர ஒர்க்அவுட்டில் இறங்கியுள்ள அருண் விஜய்யை பாராட்டி வருகின்றனர் திரை விரும்பிகள். திரையுலகில் நடிகர் ஆர்யாவிற்கு பிறகு அருண் விஜய்யும் சைக்கிள் பிரியராக மாறியுள்ளார். 

Arun Vijay Cycling And Cardio Exercise During Lockdown

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த லாக்டவுன் ஸ்பெஷலாக அருண் விஜய் நடித்த வா டீல் படம் நேரடியாக ஓடிடி-ல் வெளியாகவுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#40kms #cardio #cycling 🚴#nightworkout 💪🏼 (inside our gated community & not in public roads) Be responsible.. stay fit... stay safe!! #lockdownworkout

A post shared by Arun Vijay (@arunvijayno1) on