வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. சமீபத்தில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வருகிறார். 

Bhagyaraj And Shanthnu Fathers Day Special Video

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள ஷாந்தனு, உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார் ஷாந்தனு. கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார். 

Bhagyaraj And Shanthnu Fathers Day Special Video

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாந்தனு. தந்தையர் தினத்தை முன்னிட்டு தந்தை பாக்யராஜுடன் சேர்ந்து பாடல் பாடியுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு வெளியான இது நம்ம ஆளு படத்தில் இடம்பெற்ற பச்சை மலை சாமி ஒன்னு பாடலை இசையமைத்து பாடுகிறார் பாக்யராஜ். மிகப்பெரிய வெற்றிப்படமான இந்த படத்தை இயக்கி நடித்தது மட்டுமல்லாமல் இசையமைத்த பெருமையும் பாக்யராஜையே சேரும்.