தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.சன் டிவியின் சீரியல் கொரோனவை அடுத்து புதிதாக இணைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள தொடர் அன்பே வா.

குரங்கு பொம்மை படத்தில் ஹீரோயினாக நடித்த டெல்னா டேவிஸ் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகுறார்.வருண் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகர் ராகவ் மற்றும் நடிகை ப்ரீத்தா இருவரும் பல வருடங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளனர்.இந்த தகவலை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் ப்ரீத்தா மற்றும் ராகவ்.