தமிழ் திரையுலகில் தரம் வாய்ந்த படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் ராதா மோகன். அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், பிருந்தாவனம் போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இவரது இயக்கத்தில் SJ சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் பொம்மை. இதில் முக்கிய பாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்துள்ளனர். 

Radha Mohan on Yuvans Music In Bommai Radha Mohan on Yuvans Music In Bommai

காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த  லாக்டவுனில், அரசு அறிவுறுத்தலின் படி குறைந்த ஆட்கள் கொண்டு பொம்மை படத்தின் DI பணிகள் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை நடந்து வருகிறது. 

Radha Mohan on Yuvans Music In Bommai Radha Mohan on Yuvans Music In Bommai

இந்நிலையில் ராதா மோகன் கலாட்டா முகநூல் வாயிலாக லைவ்வில் தோன்றி படத்தின் மேக்கிங் குறித்தும், அவரது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், பொம்மை படத்தில் SJ சூர்யா இருப்பதே அனைவருக்கும் பெரிய ஆச்சர்யம். பொம்மை ஒரு சென்சிட்டிவ் லவ் ஸ்டோரி. படத்தில் பிரியா பவானி ஷங்கர் இருக்கிறார். மிகச்சிறந்த நடிகைஅவர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் நன்றாக உருவாகியுள்ளது. இசையில் ஓர் சர்ப்ரைஸ் இருக்கும் என்றே கூறலாம்.