இந்திய திரையுலகின் ரசிகர்களின் நாடியறிந்து இசையமைக்கும் திறன் கொண்டவர் இசையமைப்பாளர் அனிருத். பாடல்களில் கேமியோ, கான்செர்ட் மேடைகளில் நடனம் என ஜொலித்து கொண்டிருப்பதால் ராக்ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுகிறார். கூலிங் கிளாஸ், தெறிக்கும் மாஸ் கொண்டு அனிருத் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படம் வெளியான சில நொடிகளிலேயே ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் லவ் ஸ்மைலிகளில் நனைந்தார் அனிருத். 

Sivakarthikeyan To Produce Anirudhs Debut Film

இதனிடையே நட்பிற்கு இலக்கணமாய் நடிகர் சிவகார்த்திகேயன் அப்பதிவில் கமெண்ட் செய்தார். அவர் செய்த கமெண்ட்டில், சார் எப்போனாலும் சரி, என்னைக்குனாலும் சரி.. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் என்று போட்டுடைத்தார். இதன் கீழ் தொடர்ச்சியாக கமெண்ட்டுகள் குவிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவரது பங்கிற்கு ஓர் கமெண்ட்டை செய்தார். அந்த படத்தை இயக்குவதற்கு ஒரு வாய்ப்பு கேட்டு வைத்திருக்கிறேன், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். 

Sivakarthikeyan To Produce Anirudhs Debut Film Sivakarthikeyan To Produce Anirudhs Debut Film

இதே காம்போ டாக்டர் படத்தில் இருப்பதால், அரங்கம் அதிரும் காட்சிகள் படத்தில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுன் இருப்பதால் அரசு அனுமதியோடு டாக்டர் படத்தின் சில போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ளது.