தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

KamalHassan Confirmed As Host of BiggBoss 4

கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.மூன்று சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலன்களாக மாறிவிட்டனர்.இதன் நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்தது இதனையும் கமல் தொகுத்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

KamalHassan Confirmed As Host of BiggBoss 4

கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போகும் என்றும் ஷூட்டிங் தள்ளிப்போவதால் கமல் இந்த தொடரில் பங்கேற்கமாட்டார் என்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

KamalHassan Confirmed As Host of BiggBoss 4

இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது அரசு அனுமதியளித்து சீரியல் ஷூட்டிங்குகள் தற்போது துவங்கியுள்ளன.எனவே விரைவில் பிக்பாஸ் சீசன் 4 ஷூட்டிங் பிளான் செய்ததை விட சற்று தாமதமாக தொடங்கும் என்று தெளிவுபடுத்தினர்.

KamalHassan Confirmed As Host of BiggBoss 4