தமிழ் திரையுலகின் நடிப்பின் நாயகனாக திகழ்பவர் நடிகர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. நடிப்பு ஒருபுறமிருக்க ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியாய் இருக்கிறார். இன்று வரை தனது ரசிகர்களை நற்பணிகளில் ஈடுபடுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 

Suriyas Thanks Note To Fans For Corona Reliefworks

இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்ட ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் நேரத்தில் தனது ரசிகர்கள் செய்த உதவிகள் குறித்து பேசியுள்ள அவர், இந்த கடினமான சூழலில் தொடர்ந்து உதவிகள் செய்வது சாதாரண விஷயமல்ல, இதை யாருக்கும் ப்ரூவ் பண்ண செய்யல, ஒரு மன நிறைவுக்காகதான் செய்யுறோம், தொடர்ந்து உதவிகள் பண்ணுங்க, உங்களை வருத்திக்காம செய்ங்க, பாதுகாப்பா இருங்க, யாருக்கு ரொம்பவே கஷ்டம் இருக்கோ, அவங்களுக்கு இந்த உதவிகள் போய் சேர்கிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள், முடிந்தவரை ப்ளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிருங்கள், நிறைய தம்பிகள் இப்படி உதவி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படி செய்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் என்று ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

Suriyas Thanks Note To Fans For Corona Reliefworks

சூர்யாவின் இச்செயல்கள் அவரது ரசிகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தை துவங்கவுள்ளார்.