அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. 

ohmykadavule OhMyKadavule

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியது. சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. 

OhMyKadavule OhMyKadavule

தற்போது படத்திலிருந்து தினமும் தினமும் பாடல் வீடியோ வெளியானது. லியோன் ஜேம்ஸ் பாடிய இந்த பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார். சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்களின் திருமண வாழ்வை பிரதிபலிக்கும் பாடல் இது.