தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். தற்போது நவீன் இயக்கத்தில் உருவான அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய் கைவசம் பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் போன்ற படங்கள் உள்ளது. 

ArunVijay

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த சூழலில், நடிகர் அருண் விஜய், தனது வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் நடிகர்களில் இவரும் ஒருவர். 

ArunVijay

இதுகுறித்து அவர், நீண்ட காலத்திற்கு பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் பயிற்சி செய்கிறேன். நீங்களும் வீட்டிலேயே இருந்து ஃபிட்டாக உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். 21 நாட்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என விழிப்புணர்வு தெரிவிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.