மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சுரேஷ் கோபி ,1986ம் ஆண்டு வெளிவந்த யுவஜனோட்சவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள திரையுலகில் கதாநாயகனாக வில்லனாக குணச்சித்திர நடிகராக என 250 திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள  தென்னிந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான களியாட்டம் திரைப்படத்தில் தய்யம் நடன கலைஞராக நடித்த சுரேஷ்கோபி திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
 
தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உள்ளிட்ட படங்களில் அசத்தியிருந்தார். மலையாளத்தில் சுரேஷ்கோபி,மோகன்லால் மற்றும் சோபனா இணைந்து நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான மணிசித்திரதாழ், பின்னாளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , பிரபு மற்றும் ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படமாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நடிகர் சுரேஷ்கோபி  கதாநாயகனாக நடிக்கும் சுரேஷ்கோபி 251 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளான நேற்று வெளியானது. சூப்பர்ஸ்டார் சுரேஷ்கோபி 251 என குறிப்பிடப்பட்டுள்ள வித்தியாசமான கெட்டப்பில் சுரேஷ்கோபி இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நேற்று வெளியிட்டார். 

எத்தெரல் என்டர்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் சுரேஷ்கோபி251 திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் இயக்குகிறார்.தற்போது வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.