தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ஓர் அழகிய திரைப்படம்  கூழாங்கல். இயக்குனர் P.S.வினோத் ராஜ் கூழாங்கல் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

ஒரு எளிமையான வாழ்வியலை அழகாகவும் அழுத்தமாகவும் படமாக்கியுள்ள இயக்குனர் P.S.வினோத் ராஜ் சர்வதேச மொழிகளில் உள்ள மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் மற்றொரு பலமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வலு சேர்த்திருக்கிறார். 

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.MOLODIST KYIV  சர்வதேச திரைப்பட விழா  மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் திரைப்பட விழாவில்  உலகின் பல மொழிகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வாகியுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் பெருமையை  சர்வதேச அரங்கில் உரக்கச் சொல்லும் வகையில் கூழாங்கல் திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட  விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள கூழாங்கல் திரைப்படம் விரைவில் OTT  தளங்களில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் யூனியன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின், நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.