இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற இசையமைப்பாளராக உயர்ந்து நிற்கும் இசைப்புயல் A.R.ரகுமான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார்.கிட்டத்தட்ட முப்பது வருடங்களை தொட்ட A.R.ரகுமானின் இசை பயணம்  இன்றும் இடைவிடாத இசை மழை பொழிந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கு படம் பாடலுக்கு பாடல் இசையில் ஒரு படி முன்னேறி கொண்டே இருக்கிறார். இசைப்புயல் A.R.ரகுமான். தமிழர்களின் இசை ரசனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பெருமை  A.R.ரகுமானயே சாரும். 

அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருப்பது  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணமாக மருத்துவர்களும் அரசாங்கமும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.முன்னதாக ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அறிவுறுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் இசைப்புயல் A.R.ரகுமான் இன்று தனது முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு  நான் எனது முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் நீங்கள் எடுத்துக் கொண்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான A.R.ரகுமான் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)