விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வைஷாலி தனிகா.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரின் மூலம் பிரபலமானவராக மாறினார் வைஷாலி தனிகா.இதனை தொடர்ந்து பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார் வைஷாலி தனிகா.

இவற்றை தவிர கதகளி,சர்கார்,பைரவா,ரெமோ,சீமராஜா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகராசி தொடரில் நடித்து வருகிறார்.விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சில நாட்கள் மட்டும் வந்து சென்றார் வைஷாலி.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் ஒன்று கோகுலத்தில் சீதை.இவர் நடித்து வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடர்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் வைஷாலி தனிகா.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கோகுலத்தில் சீதை தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் வைஷாலி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார் வைஷாலி.தற்போது ஜகமே தந்திரம் படத்தின் வைரல் பாடலான ரகிட ரகிட பாடலில் சஞ்சனா நடனமாடிய அதே ஸ்டெப்பை ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார் இந்த நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.