Netflix-ல் எந்த நேரத்தில் வெளியாகிறது ஜகமே தந்திரம்...? படக்குழு கொடுத்த பட்டாசான அப்டேட் !
By Aravind Selvam | Galatta | June 16, 2021 15:17 PM IST
பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்,சஞ்சனா நடராஜன்,ஜேம்ஸ் காஸ்மோ,அஸ்வந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படம் கொரோனா காரணமாக நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த படம் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகும் என்று படத்தின் டீஸர் ஒன்றுடன் படக்குழுவினர் தெரிவித்தனர்.இந்த படம் ஜூன் 18ஆம் தேதி முதல் Netflix தளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.தற்போது இந்த படம் வெளியாகும் 17 மொழிகளை அறிவித்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தினை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Less than 48 Hours to Go for #JagameThandhiram
Set your timers 🔥@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @Music_Santhosh @chakdyn @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil @NetflixIndia pic.twitter.com/8uT2yXdIkf— Y Not Studios (@StudiosYNot) June 16, 2021
SHOCKING: Actress dies 10 days after meeting with a tragic accident!
16/06/2021 06:46 PM
VIRAL VIDEO: Vishal gets hit on the head with a glass bottle - Check Out!
16/06/2021 05:43 PM