விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

பிக்பாஸ்,குக் வித் கோமாளி என்று தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான வெற்றிகரமான தொடர்களை தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றும் வருகின்றன.சமீபத்தில் கூட பிக்பாஸ் நட்சத்திரங்களை இணைத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொடங்கினர்.

தற்போது சீரியல் மற்றும் நிகழ்ச்சி நட்சத்திரங்களை ஒன்றிணைத்து காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புது நிகழ்ச்சியை ஜூன் 27 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் ஒளிபரப்பவுள்ளனர்.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது