தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். 

dhanush

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் , கமல் ஹாசன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் விழிப்புணர் வீடியோக்களை வெளியிட்டனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துவிட்டது. தற்போது இதுகுறித்து நடிகர் தனுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Dhanush

அந்த வீடியோவில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய தனுஷ் மருத்துவர்களையும் அவர்களது சேவைகளையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் போது மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்புடன் வீட்டிலேயே இருந்து மருத்துவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என பரிந்து கேட்டுக்கொண்டுள்ளார்.