தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளனர் மக்கள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துவிட்டது. பள்ளி குழந்தைகளுக்காக அருமையான விஷயத்தை பகிர்ந்துள்ளார் வசந்தபாலன். 

Vasanthabalan

தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் ?

Vasanthabalan

அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது.
வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப்பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.

GVPrakashkumar

22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம். கொரோனோவை வெல்வோம் என்ற தலைப்பையும் தந்து விட்டார்.