கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார். 

Naveen

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பாதித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மால்கள், திரையரங்குகள் போன்றவை மூடப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Naveen

Naveentweet

இந்நிலையில், மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன், இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது என்று பதிவு செய்திருக்கிறார். மேலும் காரில் சென்றேன். அப்போது டிரைவர் 48 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த முதல் சவாரி நீங்கள்தான் என்று கூறினார். தினமும் பணத்தை நம்பி வாழும் மக்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவருக்கு பயண பணத்தை விட அதிகமாக 500 ரூபாய் அதிகமாக கொடுத்தேன். தயவு செய்து இல்லாதவருக்கு தந்து உதவுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.