கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளனர் மக்கள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகத்தில் இருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு, விழிப்புணர்வின் அவசியம் குறித்து கமல் வீடியோ வெளியிட்டுள்ளார். 

KamalHaasan

கண்மூடித்தனமான நம்பிக்கையாலோ, அசட்டு தைரியத்தாலோ இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்து விடக்கூடாது. வந்தால் செய்யவேண்டியதை வருமுன் செய்வோம். விலகி இருங்கள்... பாதுகாப்பா இருங்கள்.

Kamalhaasan

இந்த இரண்டு வாரம் உங்க குடும்பத்தோடு செலவிடுங்கள். நீங்க தெரிஞ்சுகிட்ட விசயங்கள உங்க குழந்தைகள் கிட்ட சொல்லிக்கொடுங்க, படிக்க நினைத்த புத்தகங்கள், பாக்கனும்னு நினைத்து விட்டுப்போன திரைப்படங்கள், கத்துக்கனும்னு நெனச்சு கத்துக்காம விட்ட இசை, நேரமில்லை என்று நீங்கள் தள்ளிப்போட்ட அந்த தொலைபேசி அழைப்பு என நாம் இயந்திரமாய் மறந்த விஷயங்களை காலத்தின் கட்டாயமாக கிடைத்திருக்கும் சின்ன வெளியின் இந்த இடைவெளியில் செய்வோம் வாருங்கள் என உலகநாயகன் கமல்ஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.