ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்திருந்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். 

sanjeev Sanjeevalyamanasa

கர்ப்பமாக இருந்த ஆல்யா மானசாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கின்றனர். பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் சஞ்சீவ்.

sanjeev alyamanasa

இதனால் ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குட்டி தேவதைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.