தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும்  லைக்குகள் அள்ளும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கழித்து வருகின்றனர்.ஷெரின் ரசிகர்களுடன் டச்சில் இருக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.

டிக்டாக்கிலும் தவறாமல் தினமும் வீடியோ போட்டுவிடுவார் ஷெரின்.இவரது டிக்டாக் வீடியோக்கள் ரசிகர்களிடம் ட்ரெண்ட் அடித்து விடும்.தற்போது தனது டிக்டாக் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஷெரின்.

அதில் நம்மளை மதிக்கிறவங்க பேச்சை ஹார்ட்லையும் , நம்மள மதிக்காதவங்க பேச்சை மியூட்லையும் வெச்ச வாழ்க்கை கியூட்டா இருக்கும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.இது சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய உசுப்பேத்துறவங்கட்ட உம்முன்னு,கடுப்பேத்துறவங்கட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்பதை போல இருப்பதால் ரசிகர்கள் இந்த வீடீயோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@shirinshringaar

Words to live by! Original by @naveenricky ##sherin ##biggbosstamil ##biggboss3 ##love ##tamil ##trend ##trending ##foryou ##fyp ##tamildialogue

♬ Tamil dialogue - shirinshringaar