மலையாளம் சினிமாவின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் டெல்னா டேவிஸ்.அடுத்ததாக சில தமிழ் படங்களில் நடித்து அசத்தினார் டெல்னா டேவிஸ்.குரங்கு பொம்மை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் டெல்னா.

அடுத்ததாக சில வருடங்கள் படிப்பிற்காக பிரேக் எடுத்த டெல்னா, சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார்.பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் டெல்னா.

இந்த தொடரில் விராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரேஷ்மா பசுபுலேட்டி,சங்கீதா,ப்ரீத்தா,ராகவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.விறுவிறுப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரின் நாயகி டெல்னா டேவிஸ்,இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

A post shared by Delna (@delnadavis_)