இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த அருவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அதிதி பாலன்,அருவி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலம் அடைந்தார். தன்னுடை சிறந்த நடிப்பால் அருவி படத்திற்காக பல விருதுகளை வாங்கிக் குவித்த நடிகை அதிதி பாலனின் அடுத்த திரைப்படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து குட்டி ஸ்டோரி ஆன்தாலஜி வெப்சீரிஸில் நடித்திருந்தார்.அடுத்ததாக தற்போது நடிகர் பிரித்திவிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய மலையாள திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இயக்குனர் தாணு பாலக் இயக்கும் புதிய திரைப்படமான கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் நடிகை அதிதி பாலன், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, அணில் நெடுமங்காடு, சுசித்ரா பிள்ளை, ஆத்மியா ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரான அண்டோ ஜோசப் தயாரித்துள்ள கோல்ட் திரைப்படத்திற்கு பிரகாஷ் அலெக்ஸ் இசையமைக்க பிரபல ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படம் அமேசான் PRIME OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது. வருகிற ஜூன் 30ஆம் தேதி வெளிவரவுள்ள கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் புதிய டீசர் தற்போது வெளியானது. மிகவும் த்ரில்லிங்காகவும் சுவாரசியமாகவும் இருக்கும் கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அடுத்ததாக கோல்ட் கேஸ் (COLD CASE) திரைப்படத்தின் டிரைலர் வரும் திங்கட்கிழமை ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.