90'ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் பூமிகா.தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தெலுங்கு குஷி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார் பூமிகா.இதனை அடுத்து ரோஜாக்கூட்டம் படத்தின் ஹீரோயினாக நடித்து தமிழிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

அடுத்ததாக ஹிந்தி,கன்னடம்,போஜ்புரி,பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அசத்தியுள்ளார் பூமிகா.பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியுள்ளார் பூமிகா.இதனை தொடர்ந்து ஒரு வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.

2007-ல் தனது நீண்டநாள் காதலனும்,யோகா டீச்சருமான பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியினருக்கு 2014-ல் ஒரு மகன் பிறந்தான்.திருமணத்துக்கு பிறகு முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் பூமிகா.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பூமிகா,தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவரிடம் பலர் பிக்பாஸிற்கு செல்வீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்,இதற்கு பதிலளித்த பூமிகா , தான் எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதில்லை முன்னால் சில வாய்ப்புகள் வந்தன ஆனால் அதில் கலந்துகொள்ளும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.