தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில், மதிமுக தனிச் சின்னதில்தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று கைகோ தெரிவித்தார்.


இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்த பிறகு பேசிய திருமாவளவன், ‘’திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்” என்ற அறிவித்து இருக்கிறார். 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நல்ல ஆளுமையாக இருந்தும் கூட திமுகவுடன், சில சீட் ஒதுக்கீடுக்காக மட்டும் ஏன் பயணிக்க வேண்டும்? என்று பல காலமாக விமர்சனம் இருந்து வந்தது. அதற்கு திருமா, ’கொள்கைகள் வேறு, ஓட்டு அரசியல் தளம் வேறு’ என்று கூறிவந்தார்.


இப்போது வரும் சட்டமனற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தனிச்சின்னத்தில் தான் விசிக போட்டியிடும் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.