மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்கான நிறுவனத்தை உருவாக்கி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. 


 தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் செளராஷ்டிரா மொழி பேசுபவர்கள் மொழிவாரி சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். அதனால் மொழிவாரி சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திடவும், தொழில் முனைவோர்களாக ஊக்கப்படுத்தவும், தொழில் தொடங்கிட கடன் உதவி வழங்கிடவும் இந்த நிறுவனம் வழி வகை செய்யும். தேசிய சிறுபான்மையினர் முன்னேற்றம் மற்றும் நிதி கழகத்தின் வழி காட்டுதலின் படி மொழிவாரி சிறுபான்மையினருக்கு கடன்கள் வழங்கப்படும். 


தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நிறுவனம் என்று அழைக்கப்படும். மொழிவாரி சிறுபான்மையினர் நல நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்.