வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி , வரும் ஜனவரி 6-ஆம் தேதி 'இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.


இந்த மாநாட்டிற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசத்தீன் ஓவைசியை வருகை தர ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையொட்டி திமுக மாநாட்டில் அசத்தீன் ஓவைசியை அழைத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், ’’ திமுகவின் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் தமிழ் நாட்டில் திமுகவுக்கு கிடைக்க கூடிய முஸ்லீம் வாக்குகளை முழுவதும் இழக்க நேரிடும். திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை மிரட்டவே, AIMIM அசத்தீன் ஓவைசியை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதா? தமிழ் நாட்டில் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் கட்டமைப்புக்கு முன் அசத்தீன் ஒய்வோசி கட்சி பூஜ்யம் என்பது திமுகவுக்கு தெரியாதா?


திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை பயமுறுத்தி குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக, ஒய்வோசியை பயன்படுத்துவதாக தோன்றுகிறது..இது போன்ற விஷப் பரீட்சையில் திமுக இறங்கும் நேரத்தில் அதன் விளைவு மோசமாக இருக்கும். அதை தேர்தலுக்கு பிறகு  திமுக உணரும் . இதைப்போல் திமுக சமுதாய அமைப்புகளை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்“ என தெரிவித்துள்ளனர்.