திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய கள்ளக் காதலியை கொன்று, அவரின் உடலை மிக கடுமையாக சிதைத்து ரயில் தண்டவாளத்தில் கள்ளக் காதலன் வீசி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான திருமணமான வினய் ராய் என்பவர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

அதே நேரத்தில், அந்த தொழிற்சாலை அமைந்துள்ள ஊரைச் சேர்ந்த 23 வயதான சீதா என்ற இளம் பெண்ணுடன், அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், கள்ளக் காதலர்கள் இருவரும் அந்த பகுதியில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, தொடர்ந்து பல மாதங்களாக இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில், கள்ளக் காதலியான அந்த 23 வயதான இளம் பெண், “என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று, தனது கள்ளக் காதலனை வற்புறுத்தத் தொடங்கி உள்ளார்.

தொடக்கத்தில் சமாளித்து வந்த அந்த கள்ளக் காதலன், ஒரு கட்டத்தில் தனது கள்ளக் காதலியை சமாளிக்க முடியாமல் கடும் கோபம் அடைந்து உள்ளான்.

அதே நேரத்தில், கள்ளக் காதலன் வினய், அந்த பெண்ணை பற்றி வெளியே விசாரித்து உள்ளார். அப்போது, அந்த இளம் பெண் ஏற்கனவே ஒருவரைக் காதலித்து ஏமாற்றி விட்டு, அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்ததும், கள்ளக் காதலனுக்குத் தெரிய வந்தது.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த கள்ளக் காதலன், “உன்னை என்னால் கட்டிக்க முடியாது” என்று, கூறியுள்ளார். 

இதனைக் கேட்ட இளம் பெண் சீதா, “உன் மீது பலாத்கார புகார் கூறி, போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவேன்” என்று, அவரை மிரட்டி இருக்கிறார்.

இதனால், கடும் கோபம் அடைந்த கள்ளக் காதலன் வினய், தனது கள்ளக் காதலி சீதாவை கொலை செய்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை மகாராஷ்டிராவின் நந்தூர் பார் மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே வீசி உள்ளார்.

குறிப்பாக, போலீசார் அந்த பெண்ணின் முகத்தை அடையாளம் கண்டு பிடிக்காமலிருக்க இருக்க, அவரின் முகத்தை முற்றிலுமாக மிக பயங்கரமாகச் சிதைத்து விட்டார். 

அதன் தொடர்ச்சியாக, கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட போலீசார், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த பெண்ணை கொன்றதாகக் கள்ளக் காதலன் வினய் ராயை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.