தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கும் சிவசிவா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியான சிவசிவா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவசிவா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஜெய். இதனைத் தொடர்ந்து பிரேக்கிங் நியூஸ் , குற்றமே குற்றம் மற்றும் இயக்குனர் சுந்தர் சியின் தயாரிப்பில் இயக்குனர் பத்ரி இயக்கும் புதிய திரைப்படம் என அடுத்தடுத்து திரைப்படங்கள் நடிகர் ஜெய்யின் நடிப்பில் தயாராகி வருகின்றன.

மேலும் அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகும் எண்ணித்துணிக திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார் . இதில் நடிகை மற்றும் அஞ்சலி நாயர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் தயாராகியிருக்கும் எண்ணித்துணிக படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து எண்ணித் துணிக படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.