“ஸ்கூலில் விடுறேன்னு” பக்கத்து வீட்டில் படிக்கும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் சஹ்னேவாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 30 வயதான நபர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர், அந்த தொழிற்சாலையிலேயே தங்கியும் வந்திருக்கிறார். 

அத்துடன், அந்த தொழிற்சாலையில் 45 வயதான நபர் ஒருவர், தனது குடும்பத்தோடு தங்கியிருந்து அங்கு பணியாற்றி வந்தார். இவருக்கு, 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 

இப்படியான சூழலில் தான், அந்த 14 வயது சிறுமியின் தாயார், கொரானா பரவல் காரணமாகத் தனது சொந்த மாநிலமான உத்திரப் பிரதேசம் மாநிலத்துக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில், அந்த 14 வயதான பெண் தன்னுடைய தந்தையுடன் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளிக்கு அன்றாடம் சென்று வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் 14 வயதான சிறுமியின் தந்தை, தன்னுடன் பணியாற்றும் அந்த 30 வயதான நபருடன் சேர்ந்து தனது மகளை பள்ளியில் விட சொல்வார்.

அத்துடன், அவர் வேலைக்கு போகும்போது, அந்த பெண் மட்டும் தனியாக வீட்டில் இருப்பார். 

அது போன்ற நேரங்களில் எல்லாம் அந்த பக்கத்து வீட்டு நபர், அந்த சிறுமியுடன் துணையாக இருப்பதும், வருவதுமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தான், கடந்த வாரம் அந்த 14 வயதான சிறுமி மட்டும் வீட்டில்  தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்த 30 வயதான நபர், அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும், “இந்த பலாத்கார சம்பவத்தை வெளியே சொன்னால், உன்னை கொன்று விடுவேன்” என்றும், அவர் மிரட்டி விட்டு சென்றிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 14 வயதான சிறுமி, அழுதுகொண்டே இருந்திருக்கிறார். அப்போது, அடுத்த சிறிது நேரத்தில் அந்த சிறுமியின் தந்தை வீட்டிற்கு வரவே, தனக்கு பக்கத்து வீட்டு நபரால் நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து கூறி கதறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.