நள்ளிரவில் உச்சக்கட்ட கோபம் அடைந்த மனைவி ஒருவர், தனது கணவனின் ஆணுறுப்பை அறுத்தெறிந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் சரவணன் - அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினர் இடையே, அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது. 

இந்த சண்டை, அவர்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான தருணத்தில், நேற்று முன் தினம் கணவன் - மனைவி இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது.

அப்போது, மனைவியை அவரது கணவன் தாக்கி உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த அவரது மனைவி, அப்போது தன்னுடைய கோபத்தை அவரிடம் வெளிக்காட்டவில்லை. 

ஆனால், அதே நேரத்தில் அன்றைய இரவுக்குள் கணவனை பழிவாங்கத் துடித்த அவரது மனைவி, அது தொடர்பாக புதிதாகத் திட்டம் போட்டுள்ளார். 

இதனையடுத்து, அன்றைய இரவு கணவன் - மனைவி இருவரும், சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். அப்போது, அவரது மனைவி கணவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனைக் குடித்த கணவன், அடுத்த சில நிமிடங்களில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று உள்ளார். 

அதே நேரத்தில், இரவு தூங்காமல் கணவனை பழிவாங்கக் காத்திருந்த அவரது மனைவி, கணவன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றதும், அந்த நள்ளிரவு நேரத்தில் பிளேடால் கணவனின் ஆணுறுப்பை மிகவும் கொடூரமான முறையில் அறுத்திருக்கிறார். 

அப்போது, அவரது கணவன் மயக்கத்தில் இருந்தாலும், வலி தாங்க முடியாமல் கண் விழித்து அலறி துடித்துள்ளார். அத்துடன், கண் விழித்து தனது நிலையைப் பார்த்த போது, தனது ஆணுறுப்பு மனைவியால் அறுக்கப்பட்டிருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

இதனால், அவர் இன்னும் கூச்சலிட்டு அலறியிருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பார்த்து உள்ளனர்.

மேலும், வலி தாங்க முடியாத அந்த கணவன், ரத்தம் சொட்டச் சொட்ட அந்த வலியுடன், தனது மனைவியை கடுமையாக மீண்டும் தாக்கி உள்ளார். அதில், அவரது மனைவி பலத்த காயம் அடைந்துள்ளார். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லாமல், அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, மனைவியால் தனக்கு நேர்ந்தது கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். 

இதனால், அவரது நிலைமையைக் கண்ட போலீசார், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கணவன் தாக்கியதில் காயம் அடைந்த அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கணவரின் ஆணுறுப்பை அவரது மனைவியே அறுத்தெறிந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.