15 வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன், பாலியல் உறவு வைத்துக்கொள்வது, அது பாலியல் வன்புணர்வில் சேராது” என்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து 
தெரிவித்து உள்ளது.

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த குஷாபே அலி என்ற நபர், “இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு, உடலுறவு வைத்து சித்ரவதை, 

வரதட்சணை கொடுமை உள்ளிட்ட கொடுமைகள்” செய்த காரணங்களுக்காக போலீசாரல் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட குஷாபே அலி, ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

குஷாபே அலி தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி மோஹ்த் அஸ்லாம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த அவர், “இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 இன் படி, 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு ஆகாது” என்று கூறினார்.

அத்துடன், “கடந்த 1860 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 375 இல், பெண் உடன்படாமல் என்று குறிப்பிடப்படும் Non Consensual என்ற வகையிலான பாலியல் உறவு வைத்துக்கொள்வதும், பாலியல் வன்புணர்வு ஆகும்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“ஆனால் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் பாலியல் வன்புணர்வு ஆகாது” அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “கடந்த 2013 ஆம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டத்தின் படி, பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளுதலுக்கான வயது வரம்பு 15 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது” என்றும், அவர் குறிப்பிட்டுக்காட்டினார்.

எனினும், “15 வயதுடைய அல்லது அதற்கு மேல் உள்ள பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என்ற சட்டம்  திருத்தப்படாததால், கணவன் - மனைவியுடன் கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேரவில்லை” என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மனுதாரரின் மனைவி, “வரதட்சணை கொடுமை, கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார்” அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவரது கணவர் கைது செய்யப்பட்டதாகவும், அதன்படியே மனுதாரர் 
உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் கேசரி நாத் திரிபாதி, “மனுதாரரின் மனைவி, தனது சகோதரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள மனுதாரர் கட்டாயப்படுத்தவில்லை” என்றும், கூறினார். 

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட குஷாபே அலிக்கு, ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், “கடந்த 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில், 18 வயதுக்குக் கீழ் உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு என்றும், அந்த நீதிபதி சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.