9 மாதமாக அம்மா வீட்டிலிருந்த மனைவி கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், தன்னுடைய சிறு வயதிலேயே தாய் - தந்தையை இழந்து விட்ட நிலையில், தன் தாய் வழி தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சிறுவயது முதல், அந்த சிறுமியை வளர்த்து வந்த அவரது தாத்தா, கடந்த வருடம் அங்குள்ள புர்னே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார். 

திருமணத்திற்குப் பிறகு, சில மாதங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அந்த இளம் பெண், அதன் பிறகு தாத்தாவைக் கவனித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதால், கணவரின் அனுமதியுடன் தாய் வீடான தன் தாத்தா வீட்டில் கடந்த 9 மாதங்களாக வந்து தங்கி உள்ளார்.

அந்த இளம் பெண் தாய் வீடான தாத்தா வீட்டிற்கு வந்த அடுத்த சில நாட்களிலிருந்தே அந்தப் பெண்ணை அவருடைய தாய் மாமான் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

மேலும், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் மிரட்டி வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அந்த இளம் பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த இந்த பாலியல் வன்கொடுமை குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளம் பெண்ணின் தாத்தாவிடம் போலீசார் விசாரித்துள்ளனர். இதனால், அந்த இளம் பெண்ணை அவரது தாத்தாவே வீட்டை விட்டுத் துரத்த முயன்றுள்ளார். 

அத்துடன், இது குறித்து அந்த இளம் பெண்ணின் கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், “சிறு வயதில் இருந்தே என் மனைவியை அவரது தாய் மாமன் இது போல பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கலாம்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், இதனால், “என் மனைவி எனக்கு வேண்டாம். அவள் அவள் தாய் மாமன் உடனே, அல்லது அவளது தாத்தா வீட்டிலோ இருந்துகொள்ளட்டும்” என்று விட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அந்தப் பெண்ணின் தாய் மாமாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே நேரத்தில் 8 மாத கர்ப்பிணியாக உள்ள அந்தப் பெண், தற்போது கணவர் ஏற்காத நிலையில் வேறு வழியின்றி அவரது தாத்தா வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவரது தாத்தாவே, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தாய் மாமன் வீட்டில் போய் தங்கிக்கொள்ளச் சொல்வதாகவும் கூறப்படுகிறது. 

எனினும், தாய் - தந்தை இல்லாமல், பேத்தியைத் தாத்தா வளர்த்து நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்த பிறகும், தாய் மாமன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால், அந்த பெண் தற்போது வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாய் நிற்பது குறிப்பிடத்தக்கது.