தமிழ் திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தப் படத்தின் படபிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைஃப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், பேஷனுக்காக பிடித்தவற்றில் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார். 

கடந்த வருடம் சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) டிபார்ட்மென்டுக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்தார். பின்னர் இவரும் அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த Medical Express 2018 UAV Challenge போட்டியில் கலந்துகொண்ட தக்‌ஷா குழு சர்வதேச அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது. அதன் பின் ஜெர்மனி சென்று, அங்கு வாரியோ (vario) ஹெலிகாப்டர் நிறுவனத்தின் முதல்வர் கிறிஸ்டென் ஸோட்னெர்வுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த கொரோனா ஊரடங்கில் கூட அஜித் ஆலோசனை செய்த தக்ஷா குழு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு அசத்தி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் உள்ள ரெட் ஸோன் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தால் வைரசை அழிக்க முடியும் என்று நடிகர் அஜித்குமார் யோசனை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பெங்களூர் இணை ஆணையர் V.N.வீரன்ஹட்ரசாமி தக்ஷா குழுவையும், வழிகாட்டியாக இருந்த தல அஜித்குமாரையும் பாராட்டியுள்ளார். ஆறு ரெட் ஸோன் ஏரியாக்களை தேர்ந்தெடுத்து, தொடர்ந்து 10 நாட்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாம். 5900 லிட்டர்களுக்கு மேல் தெளிக்கப்பட்டதாம். இந்த 10 நாட்களில் ஒரு கொரோனா கேஸ் கூட வரவில்லையாம். இதன் மூலம் பெங்களூர் மக்களும் தல அஜித்தை பாராட்டி வருகின்றனர்.