மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்று. இந்த கூட்டத்தில் பட்டியல் வகுப்பு மாணவர்களின் ஸ்காலர்ஷிப் திட்டத்தை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.  

பட்டியல் வகுப்பு மாணவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பட்ஜெட்டை ஐந்து மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காலர்ஷிப் பணத்தில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் வழங்கும் என மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி பட்டியல் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் பல்வேறு முக்கிய மற்றும் திருத்த மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக பணத்தை அனுப்ப அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 பட்டியல் வகுப்பு சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் கல்விக்கு இன்று அமைச்சரவை எடுக்கப்பட்ட முடிவுகள் பெரிதும் உதவும். நமது இளைஞர்களுக்கு உயர்தர, குறைந்த செலவிலான கல்வியை வழங்குவது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று” பிரதமர் மோடி தனது ட்விட்டர் பகுதியில் தெரிவித்து இருக்கிறார்.