பெங்களூருவில் இனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனத்தை வாகன உரிமையாளர்கள் வாகனத்தை பதிவு செய்ய முடியும் என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது கர்நாடகா அரசு. 


கர்நாடகவில்  சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு எடியூரப்பா தலைமையிலான அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் பார்க்கிங் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனத்தை வாகன உரிமையாளர்கள் வாகனத்தை பதிவு செய்ய முடியும். போலியாக பதிவு செய்து மோசடிகள் செய்ய முடியாது.

காரணம் புதிதாக கார் வாங்கியர்கள், வாகனத்தை நிறுத்துவதற்கு தங்களிடம் பார்க்கிங் வசதி இருக்கிறது என ஆதாரம் வழங்கினால் மட்டும் புது வாகனத்தை பதிவு செய்ய அனுமதி கிடைக்கும். 


போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கொண்டுவந்த இந்த பார்க்கிங் கொள்கை 2.0  , புதிய கார் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா அல்லது ஏற்கனவே கார் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்களா என பலகட்ட ஆலோசனை கூட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது கர்நாடகா அரசு. இதன் மூலம் , கார் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வாகன உரிமையாளர் காட்டினால் மட்டுமே புது வாகனத்தை பதிவு செய்ய முடியும். 

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் பார்க்கிங் கட்டணம் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்க பெறும். மேலும் போக்குவரத்து நெரிசல்கள் குறைத்து , வானங்களை ஒழுங்குபடுத்தி பொது மக்களுக்கு இடையூறுகளை தவிர்க்கப்படும் என தெரிவித்து இருக்கிறார்கள்.