வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுன மூர்த்தி தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துயிருக்கிறார். 


கடந்த மூன்று வருடங்களாக அரசியலுக்கு வருவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தவர் நேற்று தனது தான் அரசியலுக்கு வரும் முடிவில் எந்த மாற்றம் இல்லை என்று உறுதியுடன் கூறியிருந்தார். 


இந்நிலையில்  ரஜினியின் நெருங்கிய நண்பரும் மற்றும் துக்ளக் இதழின் ஆசிரியரும் குருமூர்த்தி ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியிருப்பது, "பலருக்கு 1973ல் சூழல் என்னவென்று தெரியாது. அப்போது எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார். உடனே திமுகவில் பிரிவு ஏற்படப் போகிறது என எல்லாரும் பேசினார்கள். ஆனால் நடந்தது என்னவோ, Anti - Congress மற்றும் Anti DMK ஓட்டுகளை பெற்று எம்.ஜீ. ஆர் 50 சதவீத வாக்கு வங்கி பெற்றார்.


இப்போது தமிழகத்தில் இருந்த முக்கிய இரு துருவ ஆளுமைகள் இன்று இல்லை. திமுகவில் உதயநிதி ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என நிறையபேர் உள்ளனர். 14 சதவீதம் மக்கள் ரஜினி வந்தால் ஓட்டு போடுவோம் என்று ஒரு தனியார் தொலைகாட்சி எடுத்த இணைய சர்வேவில் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் எம்.ஜி. ஆருக்கு கிடைந்தது போல்  ANTI DMK , ANTI ADMK மற்றும்  ரஜினி அபிமானிகள் , மாற்று அரசியலை எதிர்ப்பார்ப்பவர்கள் அனைவரும் ரஜினிக்கு ஓட்டு போடுவார்கள்.


காரணம், அவர் வெறும் சினிமா ஸ்டார் மட்டும் இல்லை ஒரு நல்ல மனிதர். தனக்கு என்று எதுவும் விரும்பாத எளிய மனிதர். ரஜினி பெரிய ரிஸ்க் எடுத்துதான் இந்த முடிவை அறிவித்துள்ளார். காரணம் அவருக்கு உடல் நிலை சரியில்லை.

அவர். என்.டி. ஆர் போல் கிடையாது. இன்றைய சூழலை நன்றாக கணிந்து சிந்தித்த பிறகு தான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார். மேலும் ரஜினியை பின்னாடி இருந்து யாரும் இயக்க முடியாது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஒரு கேம் சேஞ்சராக இருப்பார். “ என்றியிருக்கிறார்.