டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக விவசாய போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் 8ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் குடியரசு தின விழாவின் போது மேலும் பல்வேறு கட்ட போராட்டத்தை விவசாய சங்கங்கள் அறிவித்து இருந்தது. 


இந்நிலையில், விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது. வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள், இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாக கேட்டு உள்ளது. மேலும் உத்தரவுகள் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கக் கூடாது. மக்களை போராட்டம் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றுள்ளது உச்ச நீதிமன்றம்.


மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண் சட்டங்களைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு கூட பதிவு செய்யப்படாத நிலையை உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டியும் இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் ஒரு பகுதி உத்தரவு இன்றும், மறு பகுதி உத்தரவு நாளையும் பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.