பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்றுவிட்டுத் திரும்பிய ஆசிரியர், அந்த மாணவியையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் கோராபுட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அப்போது, அவர் பணியாற்றிய அந்த பள்ளியில் அங்குள்ள பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு சிறுமி, படித்து வந்தார். 

ஒரு கட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு மாணவி மீது சபலப்பட்ட அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஏதேதோ பேசி, அந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், அந்த மாணவியின் வயிறும் பெரிதாக வளர்ந்துள்ளது. இதனையடுத்து. அந்த மாணவியின் பெற்றோர் நடந்தது குறித்து விசாரித்த போது, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் பற்றியும், அதற்கு காரணமான தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் பற்றியும், தனது தாயாரிடம் அந்த மாணவி கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த தலைமை ஆசிரியரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டில் அவரை சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு, பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கு பல சமூக சேவை மையம் மூலமாக நிறைய உதவிகள் அளிக்கப்பட்டன. 

அத்துடன், அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து உள்ளது. அந்த சிறுமி, தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில், மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்ற அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். 

சிறையில் இருந்து வெளியே வந்ததும், நேராக தான் பாலியல் பலாத்காரம் செய்த அந்த பழங்குடியின பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அந்த பெண்ணையும், தனக்கு பிறந்த அந்த குழந்தையையும் பார்த்து பேசி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, தன்னால் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணை, அந்த குழந்தையோடு தற்போது திருமணமும் செய்துகொண்டார்.

தற்போது, அந்த தலைமை ஆசிரியர் திருமணம் செய்துகொண்ட அந்த மாணவியுடனும், அந்த குழந்தையுடனும் அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் தம்பதிகளாக வசித்து வருகிறார்.

சிறையிலிருந்து வந்த குற்றவாளி, தான் பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்துகொண்ட தகவல் அந்த பகுதி முழுவதும் பரவி அனைவர் மத்தியிலும் நெகழிச்சியை ஏற்படுத்தியது. அத்துடன், இந்த தகவல் அங்குள்ள காவல் நிலையத்திற்கும் சென்ற நிலையில், இது பற்றி மனித உரிமை கழகத்திடம் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனால், இந்த வழக்கில், மேற்கொண்டு என்ன செய்யலாம்? என்று, போலீசார் மற்றும் மனித உரிமை கழக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.