வடிவேலு காமெடி போல், ஒரு பெண்ணை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலம் அடைந்த காமெடியான “மருதமலை” படத்தில் வடிவேலு நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி தான், தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உண்மையிலேயே நடந்திருக்கிறது.

உத்தரப்பிரப் தேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தண்டா பகுதியில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டுத் தப்பித்து ஓடியதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து, அந்த பெண்ணை தேடிச் சென்ற அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்தை கடுப்படித்து, மீண்டும் அந்த பெண்ணை தங்களது கிராமத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். கிராமத்தில், இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியிருக்கிறது.

அப்போது, ஊர் மக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்தை கூட்டி விசாரித்து இருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை அந்த 4 பேரும் “நான் தான் திருமணம் செய்துகொள்வேன், நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று, மாற்றி மாற்றிப் பேசி கடும் அதிர்ச்சி அளித்தனர்.

அதாவது, அந்த பெண் இருக்கும் தண்டா பகுதியின் அருகில் உள்ள அஸிம்நகர் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட அந்த 4 இளைஞர்களும், அந்தப் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். 

இந்த 4 பேரும், அந்த பெண்ணுடன் அவர்களின் கிராமத்திற்கு வந்து, அந்த பெண்ணை தங்களுக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் 4 பேருமாகச் சேர்ந்து 2 நாட்களாகத் தங்கி வைத்து உள்ளனர். 

இதனையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என்று, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்று உள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் புகார் அளிக்க விடாமல், அந்த 4 இளைஞர்களின் கிராமத்தின் தடுத்து உள்ளனர்.

அத்துடன், அந்த கிராம மக்கள் அந்த 4 இளைஞர்களிடமும் தனித் தனியாகப் பேசி யாராவது ஒருவர் தான், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். 

இப்படியாக, தொடர்ச்சியாக 3 நாட்களாக இளைஞர்களிடம் கிராம மக்கள் பேச்சு வார்த்தை நடத்தியும், 4 பேரில் யாரும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை.

இதனால், “இந்த 4 இளைஞர்களில் யாராவது ஒரு இளைஞரைத் தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளுமாறு” அந்த பெண்ணிடம் ஊர் மக்கள் பேசி பார்த்து உள்ளனர். அப்போது, அவரும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இதனையடுத்து, அந்த 4 இளைஞர்களிடமும் கிராமத்துப் பஞ்சாயத்தார் பேசி பார்த்தனர். ஆனால், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், வேறு வழியின்றி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று, கிராம மக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் சீட்டு எழுதிப் போட்டுத் தேர்வு செய்ய முடிவுக்கு வந்தனர். இதற்கு, அந்த 4 இளைஞர்களும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, 4 பேப்பரில் அந்த 4 இளைஞர்களின் பெயரையும் எழுதி மடித்து ஒரு குவளையில் போட்டு, அந்த அக்கிராமத்தில் இருந்த ஒரு சிறுவனை அழைத்து அதில் இருந்து ஒரு சீட்டை எடுக்க வைத்து உள்ளனர். அதில், இரு இளைஞரைக் குலுக்கல் முறையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் நிலவியது. ஊர் மக்களே சிரித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.