பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், தினக்கூலிக்கு பஞ்சாப் மாநிலத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். 

கடந்த 2021 ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அன்று இவர் வீட்டிலில்லாத சமயத்தை சாதகமாக பயன்படுத்தி திருட்டுத்தனமாக வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு செய்து துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல், இதனை யாரிடமும் மாட்டாமல் தப்பிக்க தடயங்களை அழிப்பதற்காக அந்த 12 வயது சிறுமியை அந்த அறைக்குள்ளேயே வைத்து தீயிட்டுக் கொளுத்தியதாக காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைப் பற்றி அந்தச் சிறுமியின் தந்தை காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “நான் பஞ்சாபில் தினசரி கூலிக்கு வேலை செய்து வருகிறேன். எனது 12 வயதே ஆன இளைய மகளுக்கு நடந்த கொடூரத்தை நேரில் பார்த்த என் மூத்த மகள் என்னை அழைத்து நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியதைக் கேட்டு தான் நான் இங்கு வந்தேன்” என்று, குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் நான் வீட்டில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து என்னுடைய 12 வயது மகளை மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்தரவதை செய்து உள்ளார்கள் என்றும், அதன் பின்பு தாங்கள் தப்பிப்பதற்க்காக தடயங்களை அழிக்க என் மகள் இருந்த அறையிலேயே அவளை தீவைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி உள்ளனர்” என்றும், அவர் கூறியுள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதியால் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன், அந்தப் புகாரில், “இதற்கு முன்பே கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அதே சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தங்களின் ஆசைக்கு அவர்களுடன் வருமாறு வற்புறுத்தி துன்புறுத்தியதாகவும்” அவர் கூறியிருக்கிறார். 

இந்தப் புகாரின் அடிப்படையில், 4 பேர் மீதும் பீகார் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

பீகார் போன்ற கல்வியறிவு குறைவாக உள்ள வட மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் போதிய கல்வியறிவின்மையே என்றாலும், தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் நெட்டில் ஆபாச படம் பார்த்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். யாரைக் குறை சொல்வது விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்ற பழமொழி உண்மையாகி உள்ளது.