17 வயது காதலியை பார்க்க இரவில் வீட்டிற்கு வந்த காதலனை, அந்த பெண்ணின் தந்தை அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் கராவல் நகர் பகுதியில் 46 வயதான நபர், தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

இவரின், 17 வயது மகள், உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரை வீட்டிற்குத் தெரியாமல் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது, அந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 20 வயதான இளைஞர், டெல்லியில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அப்போது தான், இந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் காதலிக்கத் தொடங்கியது முதல், அந்த 20 வயதான இளைஞன், காதலியான அந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவு நேரத்தில் அடிக்கடி வந்து சென்று, அந்த சிறுமியிடம் வெகு நேரம் பேசிக்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இப்படியாக, மகளின் காதல் விசயம் மெல்ல மெல்லி தந்தைக்குத் தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளை வன்மையாகக் கண்டித்து உள்ளார். 

அத்துடன், “காதலை கைவிடுமாறும், தனது மகளை” அவர் எச்சரித்து உள்ளார். 

ஆனால், அந்த 17 வயது சிறுமியோ, தனது தந்தையின் பேச்சைக் கேட்காமல், மீண்டும் மீண்டும் தனது காதலனைச் சந்தித்துத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், கொரோனா விடுமுறைக்குப் பிறகு, கடந்த 7 ஆம் தேதி புதன் கிழமை அன்று, உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு அந்த இளைஞன் வந்திருக்கிறார்.

அப்போது, தனது காதலியான அந்த சிறுமியை பார்ப்பதற்காக, இரவு நேரத்தில் எப்போதும் போல் காதலி வீட்டிற்குச் சென்று உள்ளார். அந்த இளைஞர் வந்த    நேரத்தில், காதலியின் தந்தை வீட்டில் இருந்து உள்ளார். அப்போது, அந்த இளைஞரைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை, அந்த இளைஞரை பயங்கரமாகத் தாக்கி தனது வீட்டிலேயே கட்டி வைத்து மீண்டும் தாக்கியிருக்கிறார்.

அதன் பிறகு, வீட்டில் இருந்த கத்தரிக்கோலால், அந்த இளைஞனை குத்தி  கிழித்திவிட்டு, அதன் பிறகும் ஆத்திரம் தாங்காமல் மீண்டும் அந்த இளைஞனை தாக்கி இருக்கிறார். 

இந்த தாக்காதலில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளைஞன் வலி தாங்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை, தன்னுடைய நண்பரை போன் மூலமாக அழைத்து, உயிரிழந்த இளைஞனை உடலை அங்கிருந்து வேறொரு பகுதியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னர், மறுநாள் அந்த இளைஞனை உடலை மீட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “தனது 17 வயது மகளை சந்திக்க வந்த இளைஞரை, அந்த சிறுமியின் தந்தை கட்டி வைத்து அடித்தே கொலை செய்ததும், நண்பரின் உயிரிழந்த சடலத்தை மறைத்ததும்” தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து, அந்த சிறுமியின் தந்தையைக் கைது செய்த போலீசார், அந்த சடலத்தை மறைக்க உதவிய அவருடைய நண்பரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.