குடிகார கணவனால் மன உளைச்சலில் இருந்த மனைவிக்கு, மருமகள் என்றும் பார்க்காமல் மாமனார் வலை விரித்த நிலையில், மாமனாருடன் சேர்ந்துகொண்டு மனைவியே, கணவனைக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நச்னா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹீரா லால் என்ற இளைஞர், வசித்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில், மனைவி பார்லே மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் ஹீரா லால் வசித்து வந்து உள்ளார்.

ஹீரா லால், திருமணத்திற்கும் முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி, மது போதைக்கு அடிமையாக இருந்து வந்திருக்கிறார். ஆனால், ஹீரா லால் குடி பழக்கம், திருமணத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்று, அவரது பெற்றோர் நினைத்த நிலையில், அது பொய்த்துப் போனது. திருமணத்திற்கு பின்பும், ஹீரா லால் எந்த நேரமும் மது போதையிலேயே இருந்து வந்திருக்கிறார். இதன் காரணமாக, ஹீரா லால் எந்த வேலைக்குச் செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருப்பதும், அல்லது வீட்டில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டு இருப்பதுமாக இருந்து உள்ளார்.

இது தொடர்பாக ஹீரா லாலிடம் மனைவி பார்லே, தனது கணவனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால், மனசு வெறுத்துப்போய் “எடுத்து என்ன செய்வது?” என்று, தெரியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்.

அப்போது, தனது மகனின் குடி பழக்கம் மற்றும் மருமகளின் தாம்பத்திய வாழ்க்கை இல்லாத நிலை குறித்து நன்றாக அறிந்திருந்த அவரின் மாமனார் முகேஷ் குமார், மருமகள் பார்லேவுக்கு காம வலை விரித்து உள்ளார். இதனால், அந்த மருமகளும், மாமனாரின் காம வலையில் விழுந்து உள்ளார். இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கின்றனர்.

இந்த கள்ளக் காதல் விவகாரம், எப்படியோ கணவன் , ஹீரா லாலுக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியிடம் சண்டைக்கு சென்று உள்ளார். அத்துடன், தனது தந்தையிடமும் அவர் சண்டைக்கு சென்று உள்ளார்.

இதனால், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் அவரை கொலை செய்ய அவரது மனைவியும், , ஹீரா லாலின் தந்தையும் முடிவு செய்தனர்.

அதன் படி, மாமனாருடன் சேர்ந்துகொண்டு திட்டம் போட்ட ஹீரா லாலின் மனைவி, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு தூங்கச் செல்லும் முன்பாக அவருக்கு லெமன் ஜூஸில் தூக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். அதனை குடித்த அவரது கணவர் நன்றாக ஆழ்ந்து தூங்கி உள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில், அவர் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

அதன் பிறகு, மறுநாள் காலை உயிரிழந்த மகனை, அவரது தந்தை அடக்கம் செய்து உள்ளார். இப்படியான நிலையில், ஹீரா லாலின் மரணத்தில் அவரின் சகோதரர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த ஹீரா லாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக,  ஹீரா லாலின் மனைவி மற்றும் அவரது தந்தையிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

அப்போதுதான், மருமகளுடன் மாமனார் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்ததும், அதன் காரணமாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஹீரா லாலை கொலை செய்ததும் கண்டுப்பிடிகக்ப்பட்டது. இதனையடுத்து, மாமனாரையும் மருமகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.