கள்ளக் காதலி உடன் ஏற்பட்ட பணத் தகராறில் கொலை வெறியான கள்ளக் காதலன், கள்ளக் காதலியை 11 முறை கத்தியால் குத்தி கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தட்சிணகன்னடா மாவட்டம் சூரத்கல் டவுனை சேர்ந்த அசோக் பண்டாரி என்பவர், தனது 36 வயது மனைவி ரேகா பண்டாரி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மகள் ஒருவர் இருக்கிறார். 

திருமணத்திற்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக சென்ற கணவன் - மனைவியின் வாழ்க்கை போக போக அவர்களது வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்து உள்ளது. 

இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த ரேகா பண்டாரி, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பூக்கடை நடத்தி வரும் 42 வயதான வசந்த் என்பவருடன், ரேகாவிற்கு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கத்தில், ரேகாவிற்கும் - வசந்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து உள்ளது. இந்த பணம் கொடுக்கல் வாங்கல் பழக்கம், பல மாதங்களாக சென்றுக்கொண்டு இருந்து உள்ளது.

இந்த பழக்கம் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நெருக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களது உல்லாச வாழ்க்கையே இப்படியே சில காலம் சென்று உள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கிய நிலையில், வசந்துடன், ரேகா குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர்களுக்கு இடையே நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் பழக்கத்தில் திடீரென்று பிரச்சனை எழுந்து உள்ளது. இதனால், அவர்களுக்குள் சண்டை வரவும் தொடங்கி உள்ளது.

அதன் படி, நேற்று முன் தினம் மாலை அங்குள்ள சூரத்கல் குலாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு ரேகாவை, வசந்த் அழைத்து வந்து உள்ளார். அப்போதும், அவர்களுக்குள் பணத் தகராறு மீண்டும் ஏற்பட்டு உள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் வசந்த், ரேகாவை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில், ரேகாவின் வயிற்றில் 11 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதன் காரணமாக, ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சரிந்து விழுந்த ரேகா, பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். 

கடும் கோபத்தில் தனது கள்ளக் காதலியை வசந்த், கத்தியால் குத்திய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, அவர் நிதானத்திற்கு வந்ததும், ரேகாவின் உடலைப் பார்த்துப் பதறி உள்ளார். இதனால், பயந்து போன வசந்த், அங்கேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சூரத்கல் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணத் தகராறில் ரேகாவை குத்திக்கொன்று, வசந்த் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

அதே போல், கணவரை விட்டு பிரிந்த ரேகா, மகளுடன் கடந்த 17 ஆம் தேதி தான், காதலன் வசந்துடன் வாடகை வீட்டில் குடியேறியதும், அதன் பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.